உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகளுக்கு தண்டப்பணம் விதிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிட்ட 80 பேருந்துகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தண்டப்பணம் விதித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பேருந்து ஆய்வகப் பிரிவின் தலைவர் ரோஹன வட்டகே தெரிவிக்கையில்,
இம்மாதம் 08 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மொத்தம் 680 பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 80 பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அதிகமாக அறிவிட்டப்பட்ட தொகைகள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர்களுக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (18) மாத்திரம் சுமார் 150 பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டதில், 12 பேருந்துகள் அதிக கட்டணம் அறவிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஹன்வெல்ல – களுகல பகுதியில் உள்ள ஹைலெவல் வீதியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0