உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அக்கரைப்பற்று மகளிர் மகா சங்கத்தின் மகளிர் தின சிறப்பு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகளிர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழ‌மை (17) கொக்கோ கார்டனில் வெகுவிமர்சையாகவும் கோலாகலமாகவும் நடாத்தப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டார்.

அக்கரைப்பற்று மகளிர் மகா சங்கத்தின் பிரதானி, தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சகோதரி ஆயிஷா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தின் கணக்காளர் றஹுமான், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் தமீம், தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று ஒருங்கிணைப்பாளர் தோழர் அபு சஹீட் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளரும் மாநகர சபையின் உறுப்பினருமான ரமீஸ் மொஹியடின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் ஆரிப், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வாசனா, அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சகோதரி ரேகா உட்பட மகளிர் மகா சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0