கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி ஒருவர் உயிரிழப்பு.!
வட்டவளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெலிஓயா தோட்டத்தில் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் வெலிஓயா தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய யுவதியொருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரையில் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.