உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சரத் கொங்கஹகே, தேவப்பிரிய அபேசிங்க ஆகியோருக்கு பிணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கினை மீண்டும் செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக 06 ஊழியர்களைப் பணியில் அமர்த்தி, அவர்களை முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர் குழாமில் இணைத்ததன் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

60 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0