உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மின்சாரம், எரிபொருள் விநியோகம்இலங்கையில் தடையின்றி நடக்கும்.

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“உலக சந்தையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் என்பதால், எரிபொருள் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், அவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டாலும், அது பாரிய அளவிலான சுமையாக இருக்காது.

விலையேற்றத்தின் பெரும்பகுதிச் செலவை அரசாங்கத் திறைசேரியே பொறுப்பேற்கும். அதன் முழுமையான சுமையை பொதுமக்கள் மீது சுமத்தாமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தணிந்து வழமை நிலை திரும்பியவுடன், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையைக் குறைக்கவே அரசு எதிர்பார்க்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

54 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

33 0 0