உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கோர விபத்துக்களில் இருவர் பரிதாபப் பலி! 

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று ஏப்ரல் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நராவல, பொத்தல காசல் ஹில்வத்தை வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவ்வீதியின் மேட்டுப் பகுதியொன்றிலிருந்து திடீரெனப் பின்னோக்கி நகர்ந்த கப் ரக வாகனம் ஒன்று, பாதசாரி மீது மோதியதிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நராவல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய கப் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவல – தம்பவிட்ட வீதியின் எரமினிகம்மன பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த மோதலில் இரு மோட்டார் சைக்கிள்களின் சாரதிகள் மற்றும் பின்னால் பயணித்தவர்கள் என நால்வர் படுகாயமடைந்து ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெவனகல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துக்கள் குறித்து அக்மீமன மற்றும் ஹெம்மாத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

54 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

33 0 0