உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புத்தாண்டு கிரிக்கெட் சமரின் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த ராவணா அணியினர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி வட்டவளை மீனாட்சி தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் வசிக்கும் நாகராஜ் தினேஷ் என்பவரின் வழிகாட்டலில் பிரதேச இளைஞர்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பிரதேச புத்திஜீவிகள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் பிரதம விருந்தினராக பங்கேற்று இருந்தனர்.

போட்டியில் ஒரு அணிக்கு ஐந்து சுற்றுகளின் அடிப்படையில் ராவணா, ரன் ரைடர், ரோயல் சேலஞ்சர்ஸ், ஸ்ரீ சக்தி, வைட் ரொக், அதிரடி, என ஆறு அணிகள் தனது திறமைகளை மைதானத்தில் வெளிக்காட்டி இருந்தார்கள்.

மிகவும் அபாரமாக முட்டி மோதிக்கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இறுதி சுற்றுக்கு ரோயல் சேலஞ்சர்ஸ், ராவணா ஆகிய இரு அணிகளும் தெரிவு செய்யப்பட்டன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் ராவணா அணி ரொயல் சேலஞ்சர்ஸ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி மகுடத்தை தனதாக்கி கொண்டது.

இதன்படி இராவண அணியின் தலைவர் சுவேந்திரகுமார் கிருபாகரனுக்கு வெற்றி கேடயமும் அணியின் ஏனையவருக்கு பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதன்படி இரண்டாவது இடத்தை தனதாக்கிக் கொண்ட ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் குமாரவேல் அசோக் மற்றும் ஏனையவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இதனடிப்படையில் போட்டியின் சிறப்பு துடுப்பாட்ட வீரராக தேன் செல்வன் பிரகாஷ்ன் சிறந்த பிடியெடுப்பாளராக, புவனேஸ்வரன் மதுஷான் சிறந்த பந்துவீச்சாளராக, அஜித் ரொகிநாத் சிறந்த ஆறு ஓட்டங்கள் பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் முத்துக்குமார் தங்கேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். இவர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விசேட அம்சமாகும்.

நிகழ்வில் பெருந்திரளான பார்வையாளர்கள் இப்போட்டியை கண்டுகளிக்க வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

54 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

33 0 0