உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சக தனியார் பேருந்து சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு பணித்தடை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்து சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த 08.04.2026 அன்று பேசாலை மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டு இருந்த மற்றொரு தனியார் பேருந்தின் சாரதியுடன் குறித்த தனியார் பேருந்து நடத்துனர் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நடத்துனரின் ஒழுங்கீனமான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றி தகுந்த ஆதாரங்களுடன் பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளி ஆகியவற்றை 071 9090900 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு பொதுமக்கள் உடனடியாக தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0