உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹட்டன், மொரஹேனகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கித்துல்கல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயிர் காப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தனது உறவினர்கள் சிலருடன் குறித்த பகுதியில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கித்துல்கல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0