உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கைத்துப்பாக்கியுடன் முன்னாள் கடற்படைச் சிப்பாய் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அம்பாந்தோட்டை, தங்காலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை உடைமையில் வைத்திருந்த முன்னாள் கடற்படைச் சிப்பாய் ஒருவரைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தங்காலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நபர் ஒருவர் நடமாடுகின்றார் என்று பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே அவர் சிக்கியுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் முன்னாள் கடற்படைச் சிப்பாய் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் எதற்காக இந்த ஆயுதத்தை வைத்திருந்தார்? ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தாரா? அல்லது பாதாள உலகக் குழுக்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தாண்டு காலத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத ஆயுதப் புழக்கத்தைக் கண்டறிய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0