உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போதைப்பொருட்களுடன் சிக்கிய இருவர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

புத்தாண்டு தினமான நேற்று செவ்வாய்க்கிழமை (14) நாட்டின் இரு வேறு பகுதிகளில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிஸ்பென்சரி வீதியில் வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது பாரியளவிலான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வெளிப்பன்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடமிருந்து 120 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 53 கிராம் 610 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, எட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹுலான சந்தியில், கெப்பெட்டிப்பொல பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 110 கிராம் ஹெரோயின், 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0