உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மலையக மக்களுடைய காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மலையக மக்களுடைய காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி மலையக “மக்களுடைய காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை” என்ற தலைப்பில் மிக முக்கியமாக பதினொரு விடயங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரம் இன்று 15 ஆம் திகதி சாமிமலை நகரில் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நடவடிக்கைகளை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் சிப்ஸ் நிறுவனம் மற்றும் சங்கு கலைகழகம் இணைந்து முன்னெடுத்தது.

ஆயிரக்கணக்கான மலையக மக்களுக்கு சாமிமலை நகரில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த துண்டுப்பிரசுரங்கள் இப் பகுதியில் உள்ள தோட்டபுறங்களை உள்ளடக்கிய சில தோட்டங்களிலும் இதே தினத்தில் நோர்வூட் மற்றும் பொகவந்ததலாவ உள்ளடக்கிய நகரங்களிலும் இந்த துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டது.

மிக முக்கியமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை திரு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதற்கான காணி வீட்டு உரிமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக தொடர்ந்து இந்த மக்களது காணி வீட்டுரிமை பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட 11 விடயங்களை உள்ளடக்கியதாக இந்த துண்டுப்பிரசுரம் அமைந்திருந்தது.

இது தொடர்பாக சிப்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்கள் நீண்ட காலமாக காணி வீட்டுரிமை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு விடயங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனால் மாறி மாறி ஆட்சி செய்த இந்த அரசாங்கங்கள் இது தொடர்பாக ஒரு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இது தொடர்பாக ஹட்டன் பிரகடனத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கு அமைவாக மலையக மக்களுடைய காணி வீட்டு உரிமையை உறுதிப்படுத்தி அவர்களை தேசிய பிரஜைகளாக இந்த நாட்டிலே வாழ வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தார்கள்.

ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்த போதும் இது தொடர்பாக காத்திரமான முடிவை எடுக்காமல் இந்த மக்களுடைய காணி வீட்டுரிமை பிரச்சனை பின் தள்ளப்பட்டு இருக்கின்றது.

ஆகவே மக்களையும் இது சார்ந்த பங்குதாரர்களையும் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கையிலேயே மிக முக்கியமாக 11 விடயங்களை முன்கொண்டு வந்து அது தொடர்பாக இந்த துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மக்களை தெளிவுபடுத்தி ஒரு பாரிய அணி திரட்டலை செய்வதற்காக இப்பணியை முன்னெடுத்து வருவதாக கருத்து தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

2 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0