உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இரு படகுகள் மோதி விபத்து; மீனவர் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மன்னார் கடல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடிப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தின் பின்னர் ஒரு மீனவர் கடலில் காணாமல் போயிருந்தார். சக மீனவர்கள் நீண்ட நேரம் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பலனாக ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது உடல் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

சம்பவம் தொடர்பில் பொலிஸார், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பாக அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடல் தொழிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயர சம்பவம் மன்னார் மீனவ சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

0 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0