உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சகோதரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர – ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களாவர்.

இவர்களில் 35 வயதுடைய லக்சான் பேரரேரா என்பவர் மாத்திரமே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

24, 34 வயதுடைய மற்றைய இளைஞர்களின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் இன்று காலை மீட்புப்பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

2 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0