உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பாதை செப்பனிடுவதற்கு மீண்டும் நிதி பெற்றுக் கொடுக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

சீனாக்கொல்லை டிவிசனின் பாதை செப்பனிட ஒதுக்கப்பட்ட நிதி பிரதேச சபைத் தலைவரின் பொறுப்பற்ற செயலால் இழக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டம் சீனாக்கொல்லை பூசாரி டிவிசனுக்கு பாதை அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதியானது ஆட்சி மாற்றத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

மீண்டும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோர்வூட் பிரதேச சபைக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டு, இந்த வேலைத்திட்டத்துக்கு பிரதேச சபையின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய பிரதேச சபைத் தலைவர் இப்பாதையை பார்வையிட்டு, பாதை நல்ல நிலையில் உள்ளதாகவும் அதை சீரமைக்க வேண்டிய தேவையில்லை எனவும் பிரதேச செயலகத்துக்கு கடந்த மூலம் அறிவித்துள்ளார்.

உண்மையில் இப்பாதை சேதமடைந்து குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது. அதனால் தான் மக்கள் கடந்த காலங்களில் இந்தப் பாதையை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்கள்.

ஆகவே, பாதையை செப்பனிடத் தேவையில்லை என்று பிரதேச சபைத் தலைவர் கடிதம் எழுதியுள்ளமை உண்மைக்குப் புறம்பானதும். அரசியல் காழ்ப்புணர்வு மிக்கதுமான விடயமாகும். அத்தோடு, பிரதேச சபைத் தலைவர் இவ்விடத்துக்கு வந்து பாதையைப் பார்வையிட வரும்போது, வட்டார உறுப்பினர் என்ற வகையில் எனக்கும் அறிவித்திருக்க வேண்டும் அல்லது மக்களிடம் விசாரித்து முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இது சம்பந்தமாக இரண்டொரு தினங்களுக்கு முன்னரே எனக்குத் தெரியவந்தது.

ஆகவே, இந்த வட்டாரத்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்ற வகையில் இது தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வலியுறுத்தி நிதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

2 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0