உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முல்லைத்தீவில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப் பெற்ற மாணவர்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று வாழ்த்துவதுடன், சாதித்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் இரண்டாங்கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், 11 மாணவர்களை மதிப்பளித்துள்ளார்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் A,2B சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான சிறீதரன் விதுசன், உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் A,B,C சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்ற ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவனான ரவிக்குமார் ஜதுசன், பொறியியல் தெழில்நுட்பப் பிரிவில் B,2C சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான அந்தோனிவைத்தியதாதன் கிஷானி, வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்றுக்கொண்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான அந்தோனிப்பிலிப் தேவஅகல்யா, கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்றுக்கொண்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான நற்குணசிங்கம் கியூடியா, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் B,2C சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது நிலையைப் பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான ஜோன்சன்ஜெயக்குமார் இளங்கீரன், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் 2C,S சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப் பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான அருணகிரிநாதன் அனுசியன், உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் 2B,C சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான பரமசிவம் புனிதா, பௌதீக விஞ்ஞானப் பிரிவில் A,2B சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப் பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான பொன்னையா தாசன், உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் B,C,S சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது நிலையைப் பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான விஜயகுமார் நிக்சன், வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது நிலையைப் பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான தர்மராசா வைஷாலிகா ஆகிய மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இரண்டாவது கட்டமாக நேரில் சென்று வாழ்த்தியதுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் குறித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் முதற்கட்டத்தில் 09 மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் 11 மாணவர்களுமாக, ஒவ்வொரு பிரிவுகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற 20 மாணவர்கள் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்கள் அடுத்த கட்டங்களினூடாக மதிப்பளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0