உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முழுமையாக ஆதரிக்க தமிழரசு முடிவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வலு சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முழுமையாக ஆதரித்து நாடாளுமன்றத்தில் கருத்துரைப்பது என்றும், அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நேற்று மாலை தீர்மானித்தது.

கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று மாலை இணைய வழியில் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்தனர்.

இணைய வழியில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்து உறுப்பினர்களுமே ஏகமனதாக இந்த முடிவுக்கு வந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இணைய வழியில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத் தீர்மானம் எடுக்கப்பட்ட சமயம் இணைய இணைப்பில் இருந்து வெளியேறி இருந்தார். எனினும் அதற்கு முன்னர் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடன் தொடர்பு கொண்ட அவர், கட்சி எடுக்கும் முடிவுக்குத் தான் முழுமையாக கட்டுப்பட்டுச் செயற்படுவார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அதனை ஆதரித்து கட்சியின் சார்பில் மருத்துவர் ப.சத்தியலிங்கம், ச.குகதாசன் ஆகியோர் உரையாற்றுவர் என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

20 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0