உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்த இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளைப் பயன்படுத்தி போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம மற்றும் புளத்கொஹுபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேரஹெர பகுதியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தரும் நபர்களை ஏமாற்றி, பணம் பெற்றுக்கொண்டு போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை இவர்கள் வழங்கி வந்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாடிக்கையாளர் போல வேடமிட்டு, 10,000 ரூபாவிற்கு அனுமதிப்பத்திரம் பெறச் சென்ற போதே பிரதான சந்தேகநபர் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணியாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து அனுமதிப்பத்திரங்களுக்கு ஒட்டப்படும் 9 உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

20 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0