உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கட்டாக்காலி என்று கால்நடைகளைப் பிடித்து நஷ்டஈடு பறித்த கமநல சேவை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

காரைநகரில் வசிக்காத கந்தையாப்பிள்ளை விக்கினேஸ்வரன் என்பவரால் தமது ஆடுகள் பிடிக்கப்பட்டு கமநல சேவையால் 54000.00 ரூபாய் நஷ்டஈடு பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தடுப்பில் இருந்து வந்து வாழ்வாதாரமாக ஆடுகளை வளர்த்து வந்த ஒருவரது 08 ஆடுகள் 05.04.2026 அன்று மாலை 4.00 மணியளவில் பயிர்கள் எதுவும் இல்லாத இடத்தில் நின்ற போது கந்தையாப்பிள்ளை விக்கினேஸ்வரன் என்பவர் காரைநகரில் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து குறித்த ஆடுகளை பிடித்து பிரதேச சபை ஊடாக கமநல சேவை நிலையத்துக்கு வழங்கியுள்ளார்.

குறித்த விடயத்தை அறிந்த ஆடுகளின் உரிமையாளர் உரிய இடத்திற்கு சென்ற போது கமநல சேவை நிலையம் பூட்டப்பட்டு இருந்தது. மறுநாள் அதனை மீட்பதற்காக சென்ற போது உரிமையாளரிடம் 54000 ரூபாய் பணம் பெற்று ஆடுகளை வழங்கியுள்ளனர்.

குறித்த நபர் நஷ்டஈடுகளை பெறுவதற்காகவே கட்டி இருந்த ஆடுகளை வேண்டும் என்றே அவிழ்த்து விட்டதுடன் ஆடுகளின் கழுத்தில் மேய்ச்சலுக்கு கட்டி விடப்பட்ட கயிறுகள் இருந்ததுடன் ஆடுகளை மீட்ட போது கயிறு எதுவும் இல்லாமல் தந்தார்கள் எனவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆடுகள் நின்ற வயல்நிலங்களில் எந்த பயிர்களும் இல்லை அப்படி இருக்கும் போது ஆடுகள் பயிர்களை சாப்பிட்டது என்றால் எந்த விதத்தில் நியாயமானது என பாதிக்கப்பட்டவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடுகளை வீதியால் மேய்த்துக் கொண்டு சென்று விட்டு ஏற்றிச் சென்ற வாகன கூலி என்று பணம் வசூலித்ததுடன் ஆடுகள் பிடித்த நேரத்தில் இருந்து ஆடுகளை மீட்கும் வரை உணவு எதுவும் வழங்கவில்லை நாங்கள் தான் ஆடுகளுக்கு தண்ணீர், உணவு வழங்கினோம் அப்படி இருக்கும் போது பராமரிப்பு கூலி, உணவு வழங்கினோம் என்று பணம் பறிக்கிறார்கள். அங்கே கேட்டால் தமது கடமையை செய்கிறோம் என்கிறார்கள். கடமை செய்வது இதுவா? ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு இப்படி பணம் பறித்து தான் அரசாங்கம் பிழைப்பு நடத்துகிறதா என கேள்வி எழுப்பினார்.

இந்தப் பணம் எமது குடும்பத்திடம் பறிக்கப்பட்ட பணம். பிள்ளைகளின் கல்விச் செலவு முதற்கொண்டு அனைத்தையும் இந்த ஆடு வளர்ப்பு மூலம் தான் நாம் செய்து வருகின்றோம். இப்படி பணம் பறிக்க அரசாங்கத்துக்கு எப்படி மனம் வருகிறதோ?

A9 போன்ற பிரதான வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகளுக்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது. மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் தரிசு நிலமாய் இருக்கும் காரைநகரில் இப்படியான செயற்பாடு சரியானதா? எனது பிள்ளைகளின் உணவு, கல்வி போன்றவற்றிற்கான பணத்தையே இந்த அரசாங்கம் பறித்துள்ளது. எமக்கு சரியான நீதி வேண்டும். பயிர் நிலங்களை மேய்ந்து கொண்டிருந்ததற்கான ஆதாரம் எமக்கு வேண்டும். அத்தோடு மேற்படி நபருக்கு கட்டாக்காலி கால்நடைகளைப் பிடிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியையும் எமக்கு காட்ட வேண்டும் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் சார்பாகவும் பாதிக்கப்பட்டவர் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

3 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

25 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0