உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யானை தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை (8) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது மதிக்கத்தக்க அபூபக்கர் சபீனா பேகம் என்ற குடும்ப பெண் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

மேலும், சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி எம்.எம். பாத்திமா சாமிலா கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர யானை தாக்கி உயிரிழந்த குடும்ப பெண் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு காலில் முறிவு ஏற்பட்டிருந்ததுடன் அப்பெண்ணின் வீட்டின் அருகில் யானைகள் தொகையாக வழி மாறி செல்லும் இடமாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

83 0 0
அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

84 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

131 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

98 0 0