உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தலை மன்னாரில் பனை மரத் தோப்பில் தீ விபத்து.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

தலை மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகிலுள்ள தனியார் பனைத் தோப்பில் இன்று (31) காலை தீ விபத்து ஏற்பட்டது.


இந்த தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் சேதமடைந்துள்ளன. எனினும், உயிர் சேதமோ வீடுகள் அல்லது பிற சொத்துக்களுக்கு பாதிப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீயை கட்டுப்படுத்த தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் படையினர், கடற்படை வீரர்கள், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், தீயணைப்பு துறை மற்றும் கிராம மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


இதன் மூலம் மாலை 4.00 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், பனைமரங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0