காலியில் திடீரென தீப்பிடித்து எரிந்த தொடருந்து பெட்டிகள்!
காலியில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த இரண்டு தொடருந்து பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவமானது இன்றையதினம்(31.3.2026) இடம்பெற்றுள்ளது.
பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 தொடருந்து பெட்டிகளில் இரண்டு பெட்டிகளே இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளன.தற்போது தீயணைப்புப் படையினரால் தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், இந்தச் சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.