உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவருடன் ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரும் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று மாலை 04.20 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து ஏ.ஐ.-281 எனும் ஏர் இந்தியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்பதற்காகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் காத்திருந்தனர்.இலங்கைக்கு வருகை தந்துள்ள இவர்கள் இங்கு 05 நாட்கள் தங்கியிருக்கவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

35 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

68 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

64 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

58 0 0