உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் சார்ஜென்ட்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான போக்குவரத்து பொலிஸ் சார்ஜென்டை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான விசாரணையை சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் சார்ஜென்ட் நேற்று வியாழக்கிழமை(26) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் வியாழக்கிழமை(26) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வழக்கினை ஒத்திவைத்தார்.

மேற்குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான விசாரணையை சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக ஒருவரிடம் ரூபா 20 ஆயிரம் இலஞ்சம் கோரிய நிலையில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டவர் ரூபாய் 1000 வழங்கியுள்ளார். எஞ்சிய பணத்தை கொடுக்க முடியாத நிலையில் இறுதியாக ரூபாய் 4000 தருவதாக கூறியுள்ளார்.

குறித்த ரூபா 4000 தொகையை பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபரான போக்குவரத்து பொலிஸ் சார்ஜென்ட் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் அவ்விடத்தில் மாறுவேடத்தில் சென்று சந்தேக நபரை இலஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

78 0 0
அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

83 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

130 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

96 0 0