உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க இராணுவ தளத்தில் பறந்த மர்ம ட்ரோன்களால் பதற்றம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள இராணுவ தளத்தின் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் ஏற்றப்பட்டுள்ளது.இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிக்கும் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் போர்ட் லெஸ்லி ஜே. மெக்நேயர் என்ற இராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த நிலையம் அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த வளாகத்திலேயே வசிக்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த 10 நாட்களாக மெக்நேயர் இராணுவ தளத்தின் மேலாக மர்ம ட்ரோன்கள் பறக்கின்றன.அமெரிக்க இராணுவத்தின் வான் பாதுகாப்பு கவசம், கண்காணிப்பை மீறி மர்ம ட்ரோன்கள் இராணுவ வளாகத்துக்குள் நுழைந்திருப்பது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.இதில் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மெக்நேயர் இராணுவ தள வளாகத்தில் இருந்து இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், டம்பாவில் மேக்டில் விமானப் படைத் தளம் செயல்படுகிறது.இந்த விமானப் படைத் தளத்துக்கு அருகே மர்ம ட்ரோன்கள் அடிக்கடி பறப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.எனவே அமெரிக்காவில் உள்ள அனைத்து இராணுவ தளங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0