உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கட்டார், ரியாத் எரிசக்தி மையங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ஈரான் இயற்கை எரிவாயு வளமான தெற்கு பார்ஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலாக, மத்திய கிழக்கில் முக்கிய எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ஈரானின் ராஸ் லாஃபான் நகரில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் சேதமடைந்து, 5 ஏவுகணைகளில் 4 ஐ கட்டார் பாதுகாப்பு படைகள் முறியடித்தன; 1 ஏவுகணை வெடித்து நகரில் தீ விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.


கட்டார் அரசு இதை தனது தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் என்று கண்டித்து, ஈரானிய இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரை 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சவூதி அரேபியாவில் ரியாத் நகரின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன; அபுதாபியும் தாக்குதலின் இலக்காக இருந்தபோதிலும் வெற்றிகரமாக தடுப்புகளை மேற்கொண்டுள்ளது.


ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, வடக்கு ஈரான் பகுதிகள் மற்றும் டெல் அவிவ் விமான நிலையத்தில் 3 விமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி மத்திய கிழக்கில் மின் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை சீர்குலைக்கும் வலுவான பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0