உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

பிரான்சில் காவலில் இருந்த கைதி ஒருவர் கலாசார சுற்றுப்பயணத்தின் போது தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பின்னர் செனெகலில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி பொதுப் போக்குவரத்தில் பொலிஸ் அதிகாரிகளுடன் பயணித்தபோது, RER A தொடருந்தின் Auber நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. லூவர் அருங்காட்சியகத்திற்கான விஜயத்தின் போது Nanterre சிறைச்சாலையைச் சேர்ந்த இக்கைதி தப்பியோடியிருந்தார்.


சுமார் பிற்பகல் 2.30 மணியளவில் தொடருந்திலிருந்து இறங்கி மெட்ரோ வழியாக தப்பிய அவர், பொலிஸாரின் முயற்சிகளையும் மீறி தப்பிச் சென்றார். 2001ஆம் ஆண்டு பிறந்த இந்நபர் வீடு உடைத்து திருடுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டு 2028ஆம் ஆண்டு வரை சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

இந்நிலையில், செனெகலில் கைது செய்யப்பட்ட அவர் தேவையான நடைமுறைகள் பூர்த்தியான பின் விரைவில் பிரெஞ்சு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் Nanterre நீதித்துறை மற்றும் Hauts-de-Seine பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0