அலி லாரிஜானி குடும்பத்துடன் உயிரிழப்பு .!
உயர் தலைவர் அலி லார்ஜானி தனது மகள், மகனுடன் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது.அலி லார்ஜானியுடன் சேர்த்து ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் தன்னார்வ பாசிஜ் போராளிக் குழுவை வழிநடத்திய குலாம்ரெசா சுலைமானியையும் திங்கள்கிழமை இரவு கொல்லப்பட்டார்.
அலி லாரிஜானியின் மரணம் குறித்த இஸ்ரேலின் கூற்றுகளுக்கு ஈரான் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது.இந்த நிலையில், அலி அயத்துல்லா கொமெய்னியின் மரணத்துக்குப் பிறகு, ஈரான் தலைமையில் செல்வாக்குமிக்க நபராகக் கருதப்பட்ட அலி லாரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
கொமெய்னி ஆட்சி நிர்வாகத்தில் அவருக்கு நெருக்கமானவராக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அலி லாரிஜானி முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தாலும், அதிகார அமைப்புடன் அதிருப்தியை வெளிப்படுத்தும் குழுக்களுடனும் நட்புறவைக் கொண்டவர் என்ற நற்பெயரைப் பெற்றிருந்தார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே பர்த்திஸ் என்ற இடத்தில் தனது மகள் வீட்டில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தாக்குதலில் லார்ஜானியின் மகன் மோர்டெசா லார்ஜானி, அவருடன் சேர்த்து துணைத் தலைவர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதை ஈரான் தேசிய பாதுகாப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.