இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புத் தலைவர் கொல்*லப்பட்டதாக தகவல்.!
ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை முக்கியத் தலைவர் அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தன்னார்வப் படையாக விளங்கும் பசிஜ் படையின் தலைவர் குலாம் ரெசா சுலைமானியும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பில் இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
ஈரான் அரசியலில் நீண்டகால அனுபவமும் செல்வாக்கும் கொண்ட அலி லாரிஜானி, அண்மையில் தேசிய பாதுகாப்பு உயர் சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், நாட்டின் உயர்மட்டத் தீர்மானங்களில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.