காபூல் தாக்குதல்: “போர்க்குற்றம்” என ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்.!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஓமித் போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் போர்க்குற்றம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நேற்று (16) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயமும் நிலவுகிறது.இந்த தாக்குதலுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் ரஷீத் கான் மற்றும் முகமது நபி உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரஷீத் கான் தனது சமூக வலைதளப் பதிவில், பொதுமக்களின் வீடுகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள்போர்க்குற்றம் எனக் குறிப்பிட்டதுடன், இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு காரணமானவர்களை சர்வதேச அமைப்புகள் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மேலும், இந்த கடினமான சூழலில் ஆப்கானிஸ்தான் மக்களுடன் தாம் இருப்பதாகவும், நாடு மீண்டு எழும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார்.