கியூபா குறித்து ட்ரம்ப் சர்ச்சை கருத்து.!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கியூபாவை கைப்பற்றுவது தொடர்பாக சூசகமான கருத்து வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் விரும்பும் எதையும் செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டதுடன், கியூபாவை கைப்பற்றும் வாய்ப்பும் தமக்குக் கிடைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கியூபா தலைநகர் ஹவானா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், கியூபா தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விருப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கியூபா ஜனாதிபதி மிகேல் டையஸ் கெனலை பதவியில் இருந்து நீக்குவது அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எண்ணெய் விநியோகக் குறைபாடுகள் மற்றும் மின்சார தட்டுப்பாடுகள் காரணமாக கியூபா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளன.