உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

போர் விரைவில் முடியும்; எண்ணெய் விலை குறையும் – ட்ரம்ப் அறிவிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

போர் மிக விரைவாக முடிவடையும் என்றும் அதன் பின்னர் மசகு எண்ணெய் விலை குறையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஹோர்முஸ் நீரிணை வழிப் பாதுகாப்பு தொடர்பாக போர்க்கப்பல்களை அனுப்பாத சில நாடுகளை அவர் விமர்சித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை திறந்துவைத்து பாதுகாப்பாக வைத்திருக்க நட்பு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


சீனா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் நேட்டோ நாடுகள் தற்போது உதவிக்கு வராவிட்டால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். மற்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து பாதுகாப்பு வழங்க முன்வந்தால், அவர்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஈரானிடம் ஏவுகணைகள் குறைந்த அளவிலேயே உள்ளதால் தாக்குதல்கள் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்கா ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், நேட்டோ கூட்டமைப்புக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.மேலும், இஸ்ரேலுடன் அமெரிக்கா மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0