உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” – ஈரான் வெளியுறவு அமைச்சர்.!
அமெரிக்க அதிபரும் சில அதிகாரிகளும், ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறிய நிலையில், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் ஆரம்பத்தில் நடந்த தாக்குதலில் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் மொஜ்தபா காமேனி காயமடைந்திருக்கலாம் என்றும் அவரது நிலைமை குறித்து தெளிவான தகவல் இல்லை என்றும் அமெரிக்க தரப்பில் கருத்துகள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர், மொஜ்தபா காமேனி உயிருடன் உள்ளாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றும், அவர் பொதுமக்கள் முன் தோன்றவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, புதிய உச்சத் தலைவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தனது கடமைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறினார்.
மேலும், அவர் சமீபத்தில் தமக்கு செய்தி அனுப்பியதாகவும் தனது பொறுப்புகளை தொடர்ந்து ஆற்றுவார் என தெரிவித்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.