உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பெஞ்சமின் நேதன்யாகு நலமுடன் உள்ளார்” – இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
61 பார்வைகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நலமுடன் உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், அதற்கு பதிலாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தப் போர்ச் சூழலில் பல்வேறு வதந்திகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.


அத்தகைய வதந்திகளில் ஒன்றாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனுடன் தொடர்புடையதாக பரவிய ஒரு காணொளியில், அவருக்கு ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர்அலுவலகம் வெளிநாட்டு செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய விளக்கத்தில், “நேதன்யாகு படுகொலை செய்யப்பட்டார் என்ற சமூக ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. பிரதமர் நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளது.


மேலும், நேதன்யாகுவின் மகன் யய்ர் நேதன்யாகுவின் சமூக ஊடகக் கணக்கில் சமீப நாட்களில் பதிவுகள் இல்லாததை காரணமாகக் கொண்டு சிலர் வதந்திகளை பரப்பியதாகவும் கூறப்படுகிறது. அவர் கடைசியாக மார்ச் 9ஆம் தேதி பதிவிட்டது உண்மைதான் என்றாலும், அதனால் வதந்திகள் உண்மை ஆகிவிடாது என்றும் பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0