புகலிடக் கோரிக்கை விதிகளை கடுமையாக்கும் சுவிட்சர்லாந்து.!
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளவர்களின் குடும்பத்தினரை அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துக்கொள்வதை கட்டுப்படுத்துதல் முதலான பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட புதிய புகலிடக்கொள்கை ஒன்றை ஃபெடரல் அரசு உருவாக்கவேண்டும் என கோரும் மசோதா ஒன்றை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது.
புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கைகளைக் குறைத்தல், புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செலவிடப்படும் நிதியைக் குறைத்தல், புகலிடக்கோரிக்கையாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகிய விடயங்களும் அந்த மசோதாவில் அடங்கும்.
அந்த மசோதா சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.இனி அது சுவிஸ் நாடாளுமன்றத்தின் மேலவையில் நிறைவேற்றப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது