உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
67 பார்வைகள்

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் தாக்குதல், துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அண்மைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய சுகாதார சேவையின் 2025 ஆம் ஆண்டுக்கான இந்த கணக்கெடுப்பில், ஊழியர்களில் ஏழு நபர்களில் ஒருவர் நோயாளிகள் அல்லது பொது மக்களிடம் இருந்து இந்த வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தாம் எதிர்கொண்ட துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளனர் – இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகுந்த உயர்ந்த எண்ணிக்கையாகும் என்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை குறிப்பிட்டுள்ளது.

இது தவிர ஊழியர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளும் சாதனை அளவை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.தேசிய சுகாதார சேவை ஊழியர்களில் சுமார் 10 நபர்களில் ஒருவர், அம்பியூலன்ஸ் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், தாதியர்கள் மற்றும் மகப்பேறு உதவியாளர்களில் 10 நபர்களில் ஒருவரும் கடந்த ஆண்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் வரையிலான மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள் சுமார் 300,000 உடல் ரீதியான வன்முறை சம்பவங்களையும் 50,000 பாலியல் தீங்கு சம்பவங்களையும் கண்டறிந்ததாக அண்மையில் கார்டியன் செய்திச் சேவை வெளிப்படுத்தியதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0