உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரான்சில் உணவால் பரவும் தொற்றுநோய்: இருவர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
49 பார்வைகள்

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2026 ஜனவரி மாதம் வரை லிஸ்டீரியோசிஸ் எனப்படும் தொற்றுநோயின் 12 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தொற்றுகள் சமைத்த இறைச்சி உணவுகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட 12 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் சராசரி வயது 81 ஆகும். பாதிக்கப்பட்டவர்களின் வயது 34 முதல் 93 வரை காணப்படுகின்றது. அவர்களில் 7 பெண்களும் 5 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும் 12 பேரில் 11 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், பலருக்கு முன்பே பிற உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொற்றுகள் பெரும்பாலும் ஓவெர்ன்–ரோன்–ஆல்ப்ஸ் பகுதியில் பதிவாகியுள்ளன. மற்றவர்கள் போர்கொஞ்–பிராஞ்ச்–கொந்தே, நொர்மந்தி மற்றும் நுவெல்–அகிட்டேன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.


இந்த நோயுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உணவுகளில் பல வகையான சமைத்த இறைச்சி உணவுகள் அடங்குகின்றன. இவ்வுணவுகளில் லிஸ்டீரியா என்ற நோய் கிருமி இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் அவை சந்தையிலிருந்து மீளப்பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


லிஸ்டீரியோசிஸ் என்பது லிஸ்டீரியா மொனோசைடோஜீன்ஸ் எனப்படும் கிருமியால் ஏற்படும் உணவின் மூலம் பரவும் நோயாகும். இது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இந்த நோய்க்கு என்னபொதுவாக மருந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும், கிருமி பெரும்பாலும் நன்றாக சமைக்கப்படாத உணவுகளில் காணப்படக்கூடும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0