உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க இராணுவ விமானம் மேற்கு ஈராக்கில் விபத்து.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான KC-135 ஸ்ட்ராடோடேங்கர் வகை விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது.“ஒபரேஷன் எபிக் ஃப்யூரி” என்ற நடவடிக்கையின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய கட்டளை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வானில் பறக்கும் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் இரண்டு விமானங்கள் ஈடுபட்டிருந்ததாகவும், அவற்றில் ஒன்று மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நிலைமை குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பாக தரையிறங்கிய இரண்டாவது விமானமும் KC-135 வகையைச் சேர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0