உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத் தாக்குதலுக்கு ஈரான் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது.

பாரசீக வளைகுடா பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘Zefyros’ மற்றும் ‘Safesea Vishnu’ ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இதில் ‘Safesea Vishnu’ கப்பலானது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

தாக்குதலுக்குள்ளாகித் தீப்பற்றி எரிந்த கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுக நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் மூலம் பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தகர்க்கப்பட்டன” என ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஈரானிய படகு ஒன்று கப்பல்கள் மீது மோதியிருக்கலாம் என ஈராக் பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலை அடுத்து எண்ணெய் கசிவு காரணமாக கடல் முழுவதும் தீ பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக கடல் முழுவதும் தீ பரவி வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி எண்ணெய் துறைமுகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலானது ஈராக்கின் இறையாண்மையை மீறும் ஒரு செயல் என ஈராக் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாத் மான் தெரிவித்துள்ளார்.

இதற்கெதிராக சர்வதேச மட்டத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0