உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
97 பார்வைகள்

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள மக்களின் தகுதியை சரிபார்த்து உண்மையில் காணியற்றவர்களாக உள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில் நேர்முகத் தேர்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நேற்று (10.03.2026) அணிஞ்சியன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் காணியற்றவர்களாக பதிவு செய்துள்ள 111 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு காலை 10.00 மணிக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நேர்முகத் தேர்வில் 66 விண்ணப்பதாரிகள் நேரில் கலந்துகொண்டு தங்களது விபரங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலாளர் திரு. இ. ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், காணி கிளை உத்தியோகத்தர்கள், குறித்த கிராம சேவையாளர், மற்றும் சமூக மட்ட அமைப்புகளான கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், கமக்கார அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விண்ணப்பதாரிகளின் தகவல்கள், வாழ்வாதார நிலைமை மற்றும் தகுதிகள் தொடர்பாக விரிவான பரிசீலனைகளை மேற்கொண்டனர்.

இந்த செயல்முறை மூலம் உண்மையில் காணியற்ற நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களை சரியாக அடையாளம் காணுதல் மற்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு சட்டப்பூர்வமான காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுதல் முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும்.

துணுக்காய் பிரதேச செயலகம், பிரதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0