உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அகதித் தஞ்சக்கோரிக்கை யாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
74 பார்வைகள்

பிரித்தானியாவின் அகதித் தஞ்சக் கோரிக்கை முறையை மேலும் கடுமையாக்கும் வகையில் புதிய கொள்கைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.புதிய அறிவிப்பின் படி, தஞ்சம் கோரி அந்நாட்டில் தங்கியிருப்பவர்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது சட்டவிரோதமாகப் பணியில் ஈடுபட்டாலோ, அவர்கள் அரசாங்கம் வழங்கும் இலவச தங்குமிடங்களில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியும் நிறுத்தப்படும்.


வரும் ஆறாம் மாதம் முதல்அமுலுக்கு வரும் இந்த மாற்றங்களின் கீழ், தங்களைத் தாங்களே பராமரிக்கும் வசதி உடையவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச தங்குமிட வசதியும் நிறுத்தப்பட உள்ளது.மேலும், தஞ்சக் கோரிக்கையின் தீர்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்ற தற்போதைய சட்டப்பூர்வப் பொறுப்பையும் அரசாங்கம் நீக்க திட்டமிட்டுள்ளது.


கார் அல்லது மின்சார இருசக்கர வண்டி போன்ற சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் தங்களது தங்குமிடச் செலவிற்குத் தாங்களே பங்களிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட உள்ளது.இதேவேளை, இந்த புதிய கொள்கைகள் குறித்து சில அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.


தற்போது பிரித்தானியாவில் ஒரு இலட்சத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசாங்கத்தின் அகதி நிதியுதவியைப் பெற்று வருகின்றனர். இதில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் விடுதிகளில் தங்கியுள்ளனர்.இரண்டாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டுக்குள் விடுதி வசதியை முழுமையாக நிறுத்த அரசாங்கம் இலக்குநிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0