ஈரான் மீது தாக்குதல்: அசாதி சர்வதேச கால்பந்து மைதானம் கடும் சேதம்.!
ஈரான் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களால் அந்நாட்டின் புகழ்பெற்ற அசாதி சர்வதேச கால்பந்து மைதானம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.வெளிநாட்டு ஊடகங்களின் தகவல்களின்படி, பல ஆண்டுகளாக சர்வதேச கால்பந்து போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்ற முக்கிய மையமாக விளங்கிய இந்த மைதானம் தாக்குதலால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தாக்குதலின் போது மைதானத்தின் பெரும்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளி காட்சிகளில் மைதானத்தின் பார்வையாளர் அரங்கமும் தொடர்புடைய கட்டிடத் தொகுதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.