உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் உள்ள நக்‌ஷிவன் பிராந்தியத்தைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு, இன்று (5) நண்பகல் 12 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

நக்‌ஷிவன் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள விமான நிலைய முனையக் கட்டிடம் ஒன்றின் மீது ஒரு ட்ரோன் மோதியுள்ளதாகவும், மற்றொன்று ஷகராபாத் கிராமத்திலுள்ள பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அஸர்பைஜான் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், விமான நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.நக்‌ஷிவன் பிராந்தியம் ஈரான் மற்றும் துருக்கி நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

இப்பிரந்தியத்திற்கு ஆர்மீனியாவும் உரிமை கோருவதால், அமெரிக்காவின் தலையீட்டுடன் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அமைதி ஒப்பந்தம் ஒன்று நடைமுறையில் உள்ளது.

அஸர்பைஜான் நாடு, இஸ்ரேலின் உளவுத் தளமாகச் செயற்படுவதாக ஈரான் நீண்டகாலமாக அசேரி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0