உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் 17 போர்க் கப்பல்கள் அழிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
47 பார்வைகள்

ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுத்து வரும் “எபிக் ஃபியூரி” என்ற இராணுவ நடவடிக்கையின் போது, ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட மொத்தம் 17 போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.


இதற்கு பதிலடி வழங்கிய ஈரான், அமெரிக்க இராணுவ முகாம்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.இது தொடர்பாக “எபிக் ஃபியூரி” நடவடிக்கையை முன்னெடுத்து வரும் அமெரிக்க இராணுவ தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

இந்த நடவடிக்கையின் முதல் 100 மணிநேரங்களில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரான் மீது இருபத்துநான்கு மணிநேரமும் தாக்குதல் தொடர்கிறது. இதுவரை சுமார் 2,000 இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளன.


மேலும் ஈரான் கடற்படை முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் கடற்படையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட 17 போர்க்கப்பல்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் மூழ்கடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் ஈரானின் பல கடற்படை தளங்கள் மீது குண்டுவீச்சு விமானங்கள், போர்விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் கடற்படையில் “மக்ரான்” எனப்படும் போர்க்கப்பல் ஒன்று இருந்தது. எண்ணெய் கப்பலை மாற்றியமைத்து போர்க்கப்பலாக பயன்படுத்தப்பட்ட இந்த கப்பல் ஹார்முஸ் நீரிணை பகுதியில் இருந்தபோது அமெரிக்க கடற்படையினரால் தாக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் “பகேரி” என்ற போர்க்கப்பல் கடந்த ஆண்டு ஈரான் கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தது. இதில் ஆளில்லா விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கப்பலும் அமெரிக்க கடற்படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதேபோல் ஜமரான், சாஹந்த், சபாலன், பேயந்தர், நக்தே உள்ளிட்ட பல போர்க்கப்பல்களும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரானின் ஒரு நீர்மூழ்கிக்கப்பல் பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்க படையினரால் மூழ்கடிக்கப்பட்டதாகவும், “தரேக்” எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட பல சிறிய நீர்மூழ்கிப் படகுகளும் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.இதனுடன், இந்தியாவின் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற “மிலன் 2026” என்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்று திரும்பிய ஈரானின் “தேனா” என்ற போர்க்கப்பல், இலங்கை அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ குண்டுகளால் நேற்று அதிகாலை மூழ்கடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தாக்குதலில் சுமார் 80 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.ஈரான் கடற்படையில் இருந்த 17 போர்க்கப்பல்களும்அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், ஈரான் தரப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் காரணமாக வளைகுடா நாடுகள் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் போர்ப்பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0