உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் மீதான போருக்கு அமெரிக்காவிற்கு பெரும் செலவு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
69 பார்வைகள்

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. போரின் ஒவ்வொரு நாளுக்கும் அமெரிக்க இராணுவத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.


அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, 2023 அக்டோபர் முதல் 2025 வரை இஸ்ரேலுக்கு 21.7 பில்லியன் அமெரிக்க டாலர் இராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் டாலர் என்பது சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.அதனைத் தவிர, யேமன், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்க பட்ஜெட்டில் இருந்து 9.65 பில்லியன் முதல் 12 பில்லியன் டாலர் வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட மொத்த உதவி 31 பில்லியன் முதல் 33 பில்லியன் டாலர் வரை என கணிக்கப்பட்டுள்ளது.ஈரான் மீதான போர் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்க இராணுவத்திற்கு 779 மில்லியன் டாலர் (சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்) செலவாகியுள்ளது.போருக்கான முன் ஏற்பாடுகளாக 630 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பல்கள் அனுப்புதல், விமானங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், படையினரை நிலைநிறுத்துதல் ஆகியவற்றுக்கானசெலவுகள் இதில் அடங்கும்.


அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான “ஜெரால்ட் போர்ட்” இப்போரில் பயன்படுத்தப்படுகிறது. 4,600 படை வீரர்களை கொண்ட இந்தக் கப்பலுக்கு ஒரு நாளுக்கு சுமார் 6.5 மில்லியன் டாலர் செலவாகிறது.ஈரான் மீதான போர் காரணமாக அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 40 பில்லியன் டாலர் முதல் அதிகபட்சம் 115 பில்லியன் டாலர் வரை செலவாகலாம் என போர் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். போர் நீண்டால் இந்த செலவு 210 பில்லியன் டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் 2025ஆம் ஆண்டுக்கான இராணுவ பட்ஜெட் 850 பில்லியன் டாலர் ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0