அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளவர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், உலகில் நிலவும் போர் சூழ்நிலைக்கு சில உலகத் தலைவர்களின் செயற்பாடுகள் காரணமாக உள்ளன எனக் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என்றும், ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், இலங்கை ஜனாதிபதி இவ்விவகாரம் குறித்து கண்டனம் தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது என அவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகள் இந்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.கிரீன்லாந்து போன்ற பகுதிகள் தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இத்தகைய போக்குகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.










