உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
50 பார்வைகள்

சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இடம்பெற்ற இரட்டை வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

ஜனாதிபதி மெக்ரோனின் வாகனப் பேரணி விடுதியை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவம் இடம்பெற்ற போதிலும், பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றதால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி , சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சிரியாவின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

சுற்றுலா அமைச்சுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த இரு குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் செயலிழக்கச் செய்ய முற்பட்ட போதே அவை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது குண்டு வெடித்த பின், அங்கு மீட்புப் பணிக்காக நின்ற நோயாளர் காவு வண்டிக்கு அருகே இரண்டாவது குண்டு வெடித்துள்ளது.

சிரியாவில் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஒருவர் அங்கு செல்லும் முதல் விஜயம் இதுவாகும்.

கடந்த வாரமும் தமஸ்குஸில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற நிலையில், இன்றைய தாக்குதல் புதிய அரசாங்கத்துக்கு பெரும் பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0