உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்: நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு உறுதி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
79 பார்வைகள்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் மேலும் அமெரிக்க உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அமெரிக்க நிர்வாகம் எச்சரித்துள்ளது.ஈரானுக்கு எதிரான மோதலில் உயிரிழந்த முதல் அமெரிக்க இராணுவ வீரர்களில் நான்கு பேரை செவ்வாய்க்கிழமை (03) அமெரிக்க இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. இதுவரை பதிவான ஆறு உயிரிழப்புகளில், நான்கு பேர் அமெரிக்க இராணுவ ரிசர்வ் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போர்ட் ஷுய்பாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்கள் 20 முதல் 42 வயதுக்குள் உள்ளவர்கள் என்றும், அவர்கள் டெஸ் மொயின்ஸ் நகரை மையமாகக் கொண்ட பிரிவில்பணியாற்றியவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில், ஈரான் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளில் மத்திய கிழக்கு முழுவதும் 500க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. நிலைமை மேலும் பதற்றமடைந்துவருவதாக பாதுகாப்புத் தரப்புகள் எச்சரித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0