உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆசியா கெப்பிட்டல் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இடையிலான நீண்ட சர்ச்சை முடிவுக்கு வந்தது.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஆசியா கெப்பிட்டல் பிஎல்சி மற்றும் அதன் ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சை, இருதரப்பு உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டங்கள், நிறுவன மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் சிக்கலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.


முன்னதாக, ஆசியா கெப்பிட்டல் நிறுவனத்திற்கு எதிராக ‘சிசி டிரஸ்ட்’ நிறுவனம் தாக்கல் செய்த குற்றவியல் முறைப்பாட்டை, அதிகார வரம்பு காரணங்களால் கோட்டை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த முறைப்பாடு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, குற்றச்சாட்டுகள் குறித்து தீர்ப்பு வழங்கப்படாமலேயே சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து, ஆசியா கெப்பிட்டல், சிசி டிரஸ்ட் மற்றும் அதன் பரிந்துரைக்கப்பட்ட ‘டபிள்யூ எஸ் டிரஸ்ட் பிரைவேட் லிமிடெட்’ உள்ளிட்ட ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இடையே சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் படி, ‘ரிவர் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் உள்ள பங்குகளை மாற்றுவதன் மூலம், இரு தரப்புகளுக்குமிடையிலான அனைத்து நிலுவை கடமைகளும் முழுமையாகவும் இறுதியாகவும் தீர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0