உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை – இங்கிலாந்தில் வரலாற்றுச் சாதனை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
45 பார்வைகள்

இங்கிலாந்தில் இறந்த ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை என்ற சாதனையை ஹ்யூகோ எனும் 10 வார ஆண் குழந்தை படைத்துள்ளது.பிறவியிலேயே கருப்பை இல்லாத குறைபாடு கொண்ட ஒரு பெண், மறைந்த நன்கொடையாளரிடமிருந்து கருப்பை பெற்று இந்த மருத்துவ சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது மருத்துவ வரலாற்றில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


2025ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக, மேற்கு லண்டனில் உள்ள குயீன் சார்லட் மற்றும் செல்சி மருத்துவமனையில் ஹ்யூகோ பிறந்துள்ளார். பிறக்கும் போது சுமார் 3.1 கிலோ எடையுடன் இருந்ததாகவும், தற்போது முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.பல தசாப்தங்களாக நடைபெற்றமருத்துவ ஆய்வுகளின் பலனாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது கருவுறாமை சிக்கல்களை எதிர்கொள்ளும் பல பெண்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.


லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு மருத்துவக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த கருவுறுத்தல் சிகிச்சை (ஐவிஎஃப்) மற்றும் பிரசவம் சாத்தியமானது.ஏற்கனவே உயிருள்ள உறவினரிடமிருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் ஒரு குழந்தை பிறந்திருந்தாலும், தற்போது இறந்த நன்கொடையாளரின் கருப்பை மூலம் ஹ்யூகோ பிறந்தது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சாதனை, எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தைப் பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நன்கொடையாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மருத்துவக் குழுவினருக்கும் குழந்தையின் தாய் தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0